Skip to main content

ஆசிரியர் போராட்டத்தால்அகவிலைப்படி தாமதம்

அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு தாமதம் ஆவதால், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.
கடந்த மாதம், 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த உயர்வு, ஜூலை மாதம் முதலே கணக்கிட்டு வழங்கப்படும்.
பொதுவாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை உயர்த்தியதும், தமிழக அரசு ஊழியர்களுக்கும், அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். ஆனால், ஒரு மாதமாகியும், அறிவிப்பு வெளியாகவில்லை. இது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், கடும் அதிருப்தியை 
ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:அகவிலைப்படியை உயர்த்துவதற்கான கோப்பில், முதல்வர் கையெழுத்து போட்டு விட்டார். அறிவிப்பு வெளியாக இருந்தபோது, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்; எனவே, அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது; முதல்வரிடம் இருந்து, உத்தரவு வந்தபிறகே, அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

source:http://www.dinamalar.com/news_detail.asp?id=1365063

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்