Skip to main content

அரசு டிரைவர் நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

தொழிலாளர் நலத்துறையில் காலியாக உள்ள, டிரைவர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சென்னை, கோவை, திருச்சி, மதுரை சரக தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களில், தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) மற்றும் தொழிலாளர் ஆய்வாளர் வாகனங்களுக்கு, டிரைவர் நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல்,
சென்னை தொழிலாளர் கமிஷனர் அலுவலக வாகன ஓட்டுனர் பணயிடம், குன்னுார் தொழிலாளர் துணை கமிஷனர் அலுவலகம், கோத்தகிரி தோட்ட நிறுவனங்கள் ஆய்வாளர் அலுவலகம், ஆகியவற்றுக்கும் டிரைவர் நியமிக்கப்பட உள்ளனர். இப்பதவிக்கு ஓட்டுனர் உரிமத்துடன், இரண்டு ஆண்டு அனுபவம் உள்ள, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தகுதியானவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை, www.labour.tn.gov.in இணைய தளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னை, தேனாம்பேட்டை; கோவை வட்டார போக்குவரத்து அலுவலக வளாகம் பின்புறம்; திருச்சி மான்னார்புரம், காஜா மியான் தெரு; மதுரை, எல்லீஸ் நகரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டடம் ஆகியவற்றில் உள்ள, தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்திலும், விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.“பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், நவ.,6ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்,” என, தொழிலாளர் ஆணையர் அமுதா தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா