நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி 0.5சதவீதம் குறைத்தது. இந்த ஆண்டு இதுவரை 1.25 சதவீதம் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை குறைத்ததை அடுத்து தனிநபர் கடன், வாகன கடன், வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதங்களையும் குறைக்கவேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.இதையடுத்து வங்கிகள் வட்டி வீதங்களை குறைத்து வருகின்றன. இந்த நிலையில் திருவிழா காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டியை குறைப்பதாகஇந்தியன் வங்கி அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வடக்கு மண்டல மேலாளர் மற்றும் பொதுமேலாளர் எம்.நாகராஜன் கூறியதாவது:-திருவிழா காலத்தை கொண்டாடும் வகையில் இந்தியன் வங்கி வீட்டுக்கடன் வட்டியை மிகவும் குறைவாக 9.65 சதவீதம் ஆகவும், வாகன கடன் வட்டியை 10 சதவீதம் ஆகவும் குறைத்துள்ளது.