Skip to main content

அரசு ஊழியர்களின் பணி ஆண்டுதோறும் ஆய்வு

ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தடுக்க, அரசு ஊழியர்களின் பணி ஆவணங்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய, அனைத்து துறைகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:மத்திய அரசின், பல்வேறு துறைகளில், 50 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள், பணியாற்றுகின்றனர். இவர்கள், ஓய்வு
பெறும் போது, அவர்களின் பணி ஆவணத்தில் ஏற்படும் குளறுபடியால், அவர்களுக்கு, ஓய்வூதிய பலன்கள் பெறுவதில், காலதாமதம் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, பணியாளர்களின் பணி ஆவணங்கள், ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படவேண்டும். ஆவணத்தில் ஏதாவது தவறு இருந்தால், அது பற்றி, சம்பந்தப்பட்ட ஊழியருக்கும், துறையின் தலைமைக்கும் தெரிவித்து தீர்வு காணப்பட வேண்டும். இதை, குறிப்பிட்ட காலவரைக்குள், செய்து முடிக்க வேண்டும். அப்போது தான், ஓய்வு பெறும் போது, அதன் பலன்களை பெறுவதில், சம்பந்தப்பட்ட ஊழியருக்கு, எந்த தாமதமும் ஏற்படாது.
இவ்வாறு, உத்தரவில், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், கூறியுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்