Skip to main content

வெளிநாடுகளில் கிடைக்கும் சில முக்கிய உதவித்தொகை திட்டங்கள்

வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு பல்வேறான உதவித்தொகை திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் சில, மிகவும் முக்கியமானவை. அதைப்பற்றி அறிந்துகொள்வது, வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். 


பிரிட்டன் BRITISH CHEVENING SCHOLARSHIPS இது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு உதவித்தொகையாகும். இந்த உதவித்தொகையைப் பெற, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சாராத, இதர 116 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான விபரங்களுக்கு www.chevening.org 

COMMONWEALTH SCHOLARSHIPS இந்த உதவித்தொகை, காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து, பிரிட்டனில், உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகும். டியூஷன் கட்டணம், வாழ்க்கைச் செலவினங்கள், விமானப் போக்குவரத்து கட்டணம் மற்றும் கல்வி ஆதாரங்களுக்கான கட்டணம் உள்ளிட்ட முக்கிய கட்டணங்கள், இந்த உதவித்தொகைக்குள் அடங்கும். இதைப்பற்றிய விபரங்களுக்கு www.cscuk.dfid.gov.uk 

அமெரிக்கா USA FULBRIGHT SCHOLARSHIPS சர்வதேச மாணவர்களுக்காக, அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவித்தொகை இது. படிப்பு காலத்தில், ஒரு மாணவருக்கு ஆகும் அனைத்து செலவினங்களையும் உள்ளடக்கியதுதான் இந்த உதவித்தொகை. இதுபற்றிய முழு விபரங்களுக்கு www.iie.org/en/Fulbright 

ROTARY FOUNDATIONS AMBASSADORIAL SCHOLARSHIPS தனியார் பங்களிப்பின் மூலமாக, இளநிலை, முதுநிலை மற்றும் தொழிற்கல்வி மேற்கொள்ளும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய உதவித்தொகை திட்டங்களுள் இதுவும் ஒன்றாகும். விரிவான விபரங்களுக்கு www.rotary.org/en/studentsandyouth/educationalprograms/ambassadorialscholarships/Pages/ridefault.aspx 

ஆஸ்திரேலியா AUSTRALIA AWARDS SCHOLARSHIPS திறமையும், தகுதியும் வாய்ந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு AusAID -ஆல் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. விரிவான விபரங்களுக்கு www.australiaawards.gov.au 

இதர உதவித்தொகை திட்டங்கள் IELTS SCHOLARSHIPS ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட நாடுகளில் உயர்கல்வி மேற்கொள்ள விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை ரூ.3 லட்சம் மதிப்பிலானது மற்றும் டியூஷன் கட்டணத்தை ஈடுசெய்வதற்கானது இது. மேலதிக விபரங்களுக்கு www.britishcouncil.in/exam/ielts/scholarships 

TOEFL SCHOLARSHIPS நல்ல அகடமிக் செயல்பாடும், சிறந்த ஆங்கில புலமையும் உடையவர்களுக்காக, ETS -ஆல் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவிற்காக 3 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய 20 உதவித்தொகைகளும், 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஒரு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. விரிவான விபரங்களை அறிய www.ets.org/toefl/scholarships.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

TN school lab Assistant Official Notification for Chennai

TN school lab Assistant Official Notification for Chennai

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன