Skip to main content

சென்னை பல்கலை. தொலை தூரக்கல்வி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொலைதூரக் கல்வி நிறுவனம் டிசம்பர் மாதத்தில் நடத்தவுள்ள எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி (ஐ.டி. மற்றும் தகவல் பாதுகாப்பு) பிஎல்ஐஎஸ்,
எம்எல்ஐஎஸ் மற்றும் டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கான அரியர் தேர்வுகளுக்கு ஆன்லைனில் (www.ideunom.ac.in) விண்ணப்பிப்பதற்கும், தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்குமான கடைசி தேதி இம்மாதம் 16-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அபராத கட்டணத்துடன் 26-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் உரிய தேர்வுக்கட்டணம் செலுத்தாதவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2