Skip to main content

தேசிய கொடியில் சாதனைஉ.பி., மாநில அரசு முடிவு:

உ.பி.,யில், நாட்டின் மிகப் பெரிய கொடிக் கம்பத்தில், மிகப் பெரிய தேசிய கொடியை பறக்க விட, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.டில்லி, கன்னாட் பிளேஸ் என்ற இடத்தில், 207 அடி உயர கொடிக் கம்பத்தில், 60 அடி உயரமும், 90 அடி நீளமும் கொண்ட தேசியக் கொடி பறக்க விடப்படுகிறது. 


        இது தான், நாட்டின் மிக உயரமான கொடிக் கம்பத்தில் பறக்க விடப்படும், பெரிய தேசியக் கொடி என்ற பெருமையை பெற்றுள்ளது.இந்த சாதனையை, உ.பி.,யிலும் தொடர, முதல்வர் அகிலேஷ் யாதவ் முயற்சி மேற்கொண்டுள்ளார். தலைநகர் லக்னோவில் உள்ள பூங்கா ஒன்றில், 207 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
அதில், கன்னாட் பிளேசில் பறக்க விடப்படும் அளவிலான தேசியக் கொடி, விரைவில் பறக்கவிடப்பட உள்ளது.அகிலேஷ் யாதவ் தந்தையும், சமாஜ்வாதி தலைவருமான முலாயம் சிங் யாதவின் பிறந்த நாளான, நவ., 22ல், 207 அடி உயர கம்பத்தில், பிரம்மாண்ட தேசியக் கொடி பறக்க விடப்பட உள்ளது.'தேசியக் கொடி ஏற்றுவதற்கான விதிமுறைகளின் படி, இரவில் கொடியை பறக்கவிடக் கூடாது. ஆனால், இந்த பிரம்மாண்ட கொடிக்கு, இந்த விதிமுறைகள் பொருந்தாது. எனவே, இரவு, பகலாக தொடர்ந்து பட்டொளி வீசி இந்தக் கொடி பறக்கும்' என, உ.பி., மாநில அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி