Skip to main content

ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு அறிவிப்பு

நகர் மற்றும் ஊரமைப்பு துறை ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு, டிசம்பர், 13ம் தேதி தேர்வு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. நகர் மற்றும் ஊரமைப்பு துறையில், ஆராய்ச்சி உதவியாளர் பதவியில் காலியாக உள்ள நான்கு இடங்களுக்கு, போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர், 13ம் தேதி, காலையிலும் மதியமும், இரண்டு தாள்களுக்கு தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வுக்கு, நவ., 4ம் தேதி வரை, 'ஆன் - லைன்' மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
புள்ளியியல், பொருளாதாரவியல், சமூகவியல் மற்றும் புவியியல் ஆகிய நான்கு பிரிவுகளில், தலா, ஒரு பதவி காலியாக உள்ளது. இந்த தேர்வை எழுத, சம்பந்தப்பட்ட பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, சென்னையில் மட்டுமே நடக்கும். அதில் தேர்வு பெறுவோருக்கு நேர்முகத்தேர்வு நடத்தி, இறுதி பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி