Skip to main content

'குரூப் - 4' தேர்வு: கவுன்சிலிங் அறிவிப்பு

'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட, 4,693 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, 2014 டிச., 21ல் நடந்தது; 10.61 லட்சம் பேர் தேர்வெழுதினர். இதில், தேர்ச்சி பெற்றவர்கள்
பட்டியல், மே மாதம் வெளியானது;

ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதையடுத்து, தகுதி பெற்றவர்களின் தேர்வெண் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. அவர்களில், இளநிலை உதவியாளர் பணிக்கு, நவ., 16; தட்டச்சருக்கு டிச., 4; சுருக்கெழுத்து நிலை -3 பதவிக்கு, டிச., 14ல் கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை, http://www.tnpsc.gov.in/results.html இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி