Skip to main content

2500 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: முதல்வர் தகவல்

 2500 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

       மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கும் விழா திங்கள்கிழமை மண்ணாடிப்பட்டு திரௌபதி அம்மன் கோயில் திடலில் நடைபெற்றது. பேரவை துணைத்
தலைவர் டிபிஆர்.செல்வம் தலைமை தாங்கினார்.


காட்டேரிக்குப்பம், சந்தை புதுக்குப்பம், பிஎஸ்.பாளையம், கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு மிக்சி, கிரைண்டர்களை வழங்கி முதல்வர் பேசியது:

புதுவையைச் சேர்ந்த அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மிக்சி, கிரைண்டர்கள் தரப்படும். மண்ணாடிப்பட்டு தொகுதியில் 12 ஆயிரம் பேருக்கு இப்பொருள்கள் தரப்படும்.

அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்கள் நிரப்பபட்டு வருகின்றன.

ஆசிரியர்கள், மேல்நிலை எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.

விரைவில் 2500 பணியிடங்கள் நிரப்பப்படும். நேர்மையான முறையில் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு்ள்ளன என்றார் ரங்கசாமி.

அரசு அலுவலர்கள், என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்