Skip to main content

மொகரம் அரசு விடுமுறை அக்டோபர் 24-ம் தேதி மாற்றம் - வெள்ளி கிழமை வேலைநாள்

மொகரம் அரசு விடுமுறை அக்டோபர் 24-ம் தேதிக்கு (சனி கிழமைக்கு) மாற்றம் - வெள்ளி கிழமை வேலைநாள்...!
அக்டோபர் 23-ம் தேதியை மொகரம் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்திருந்தது. மொகரம் மாதத்தின் முதல் நாளில் பிறைதெரிந்தால் 10-வது நாளில் மொகரம் திருநாள் கடைப்பிடிக்கப்படும். ஆனால்,
இந்த ஆண்டு முதல் நாளான அக்டோபர் 13-ம் தேதி பிறை சரியாகத் தெரியவில்லை. மறுநாள் தெரிந்தது.


இதனால், 10-ம் நாளான அக்டோபர் 24-ம் தேதியை மொகரம் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தலைமை காஜி வேண்டுகோள் விடுத்தார்.இதனை பரிசீலனை செய்த தமிழக அரசு, அக்டோபர் 23-ம்தேதிக்குப் பதிலாக 24-ம் தேதியை மொகரம் பொது விடுமுறையாக அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி