சர்வதேச ஆசிரியர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 05ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அமைப்பு, இந்தாண்டை. குழந்தை பருவ கல்வி ஆண்டாக கொண்டாட தீர்மானித்துள்ளது.சர்வதேச அளவில் உள்ள நாடுகளில் குழந்தைகள் ஆரம்ப கல்வி பெறாமல் அதிக அவதிப்படுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம்
மட்டுமல்லாது அவர்களது எதிர்காலமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பயிற்சி, குறைவான ஊழியர்கள் மற்றும் அதற்கேற்ற நிதி ஒதுக்கீடு செய்யாததன் காரணத்தினாலேயே குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.2020ம் ஆண்டிற்குள் அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி கிடைக்க வேண்டுமென்றால், 10.9 மில்லியன் (1 கோடியே 10 லட்சம்) ஆசிரியர்கள் தேவைப்படுவதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.