Skip to main content

1,863 பதவிகளுக்கு டிச.,27ல் TNPSC தேர்வு

அரசு துறைகளில், 'குரூப் - 2 ஏ' பிரிவில், 1,863 காலியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்வில், பட்டப்படிப்பு முடித்த அனைவரும் பங்கேற்கலாம்.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர்
பாலசுப்ரமணியன் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 ஏ பிரிவில், நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளில், 10க்கும் மேற்பட்ட துறைகளில், 1,863 காலியிடங்களுக்கு, டிசம்பர், 27ல் தேர்வு நடக்கும். தேர்வு எழுத விரும்புவோர், 'ஆன் - லைன்' மூலம் மட்டுமே, நவ., 11க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணத்தை, நவ., 13க்குள் செலுத்தலாம். தமிழகம் முழுவதும், 116 மையங்களில் தேர்வு நடக்கும்.பட்டப்படிப்பு முடித்த அனைவரும் தேர்வில்
பங்கேற்கலாம். தேர்வுக்கான தகுதி விவரங்களை, http://www.tnpscexams.net/ மற்றும் http://www.tnpscexams.in/ என்ற இணையதள இணைப்புகளில் அறிந்து கொள்ளலாம்.
தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி