Skip to main content

பி.எப். தொடர்பான குறைகளை தீர்க்க நவ.11-ம் தேதி சிறப்பு முகாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை தீர்க்க வரும் நவம்பர் 11-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வரும் 31-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில்வரும் நவம்பர் 11-ம் தேதி சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் வருங்கால வைப்பு நிதி தொடர்பாக நாள் கணக்கில் தீர்க்கப்படாமல் உள்ள புகார்கள் மற்றும் குறைகளுக்கு தீர்வு காணப்படும்.எனவே, இந்த சிறப்பு முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் வரும் 31-ம் தேதிக்குள் தங்களுடைய பெயர், வைப்புக் கணக்கு எண், புகார் குறித்த விவரம் உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட அலுவலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு அதிகாரியிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2