Skip to main content

எடை குறைவான ஹெல்மெட்: ஆலோசனை வழங்கி பாராட்டு பெற்ற ஆசிரியை.

அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் பங்கேற்ற கலாம் பாசறை சந்திப்பு நிகழ்ச்சியில், எடை குறைவான ஹெல்மெட் தயாரிக்கவேண்டுமென்ற கோரிக்கையை காரைக்கால்
பள்ளி விரிவுரையாளர் முன்வைத்து பாராட்டு பெற்றார்.

சென்னையில் உள்ள கோடம்பாக்கம் நல்லோர் வட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாம் பாசறை சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் கலந்துகொண்டார். இக்கருத்தரங்கில் பங்கேற்று, பாராட்டு பெறும் வகையிலான கருத்தை வெளியிட்ட காரைக்கால் தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வேதியல் விரிவுரையாளர் எஸ்.சித்ரா, 4 கிலோ எடையிலிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை காலை 400 கிராம் எடையில் தயாரித்ததாக கலாம் கூறியிருந்தார். அதுபோல, கார்பன் கூட்டுப் பொருளைக் கொண்டு ஹெல்மெட் தயாரிக்க முடியுமா, முடியும் என்றால் தயங்காமல் தயாரிப்புக்கான நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆலோசனை கூறியிருந்தேன்.

இதனை மிகச்சிறந்த ஆலோசனை என்ற கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ், தயாரிக்க முடியும் என்ற பதிலைத் தந்தார். அரங்கத்தில் இருந்தோரும் இந்த ஆலோசனைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா