Skip to main content

பி.எட். சேர்க்கை: தர வரிசைப் பட்டியல் வெளியீடு.

ஆசிரியர் கல்வியியல் இளநிலைப் பட்டப் படிப்பான பி.எட். சேர்க்கைக்கானதரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட். இடங்களில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன்
சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது.


வருகிற 28-ஆம் தேதி தொடங்கி அக்டோபர்5-ஆம் தேதி வரை 6 நாள்கள் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு 7,425 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.


இது குறித்து பி.எட். கலந்தாய்வு செயலர் பாரதி கூறியதாவது:


பி.எட். சேர்க்கைக்கான குறைந்தபட்ச கட்-ஆஃப் மதிப்பெண் அண்மையில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு விண்ணப்பதாரருக்குமான தனிப்பட்டகட்-ஆஃப் மதிப்பெண் வெளியிடப்பட்டது. இந்த தனிப்பட்ட கட்-ஆஃப் தொடர்பில் (லிங்க்) விண்ணப்ப எண்ணை மாணவர்கள் பதிவு செய்தால் தங்களுடைய ரேங்க், கட்-ஆஃப், பாடம் உள்ளிட்ட விவரங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2