Skip to main content

மாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்கள் கட்டாயம்

மாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்கள் கட்டாயம்: பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. உத்தரவு...

  சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்களையும் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. அமைப்பு அண்மையில் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: 



சி.பி.எஸ்.இ. அமைப்பின் இணைப்பைப் பெற்றுள்ள அனைத்துப் பள்ளிகளும் மாணவர் சேர்க்கையின்போது தாய்மொழி குறித்த விவரங்களையும், மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் மாணவர் கற்பிக்க விரும்பும் மொழிகளையும் சேர்க்கைப் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.இதுதொடர்பான தேவையான அனைத்து மாற்றங்களையும் பள்ளி சேர்க்கைப் படிவங்களிலும், பதிவேடுகளிலும் மேற்கொள்ள வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில், ஆங்கிலம், ஹிந்தியுடன் ஏதாவது அரசியல் சாசன சட்டத்தில் நவீன இந்திய மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒன்றை மூன்றாவது மொழியாக குழந்தைகள் கற்கலாம்.கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் அண்மையில் மூன்றாவது மொழியான ஜெர்மானிய மொழிக்குப் பதிலாக சம்ஸ்கிருத மொழி கொண்டுவரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், குழந்தையின் தாய்மொழி விவரங்களைப் பதிவு செய்வதை சி.பி.எஸ்.இ. கட்டாயமாக்கியுள்ளது. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா