Skip to main content

புவியியல் சுரங்கத்துறை அலுவலகத்தில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

விருதுநகர் மாவட்ட துணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
இம்மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை
இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு ரூ.9 ஆயிரத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட இருக்கின்றனர். இப்பணிக்கு எஸ்.சி.எ., எஸ்.சி, எஸ்.டி ஆகிய பிரிவினருக்கு 21 வயது முதல் அதிகபட்ச வயது வரம்பு 35 வயதிற்குள்ளும், எம்.பி.சி, பி.சி பிரிவினருக்கு 32 வயதிற்குள்ளும், இதர பிரிவினருக்கு 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
மேலும், குறைந்தபட்ச கல்வி தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். எனவே இப்பணிக்கு தகுதியுள்ளவர்கள் சுய விவர குறிப்புகளுடன், ஆதார் அடையாள அட்டை, உரிமம், ஜாதிசான்று ஆகியவைகளுடன் விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் துணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம், விருதுநகர் என்ற அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற அக்.5-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி