Skip to main content

பி.எப். புகார்களுக்குத் தீர்வுகாண புதிய திட்டம் தொடக்கம்


தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான புகார்களுக்குத் தீர்வு காண்பதற்காக புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஒ) வெளி
யிட்டுள்ள செய்திக் குறிப்பு:


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ‛வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்’ என்ற பெயரில் புதிய திட்டத்தைத் தொடங்கி உள்ளது. இதன்படி, மாதம்தோறும் 10-ம் தேதி சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறும். அன்றைய தினம் தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள், உறுப்பினர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணப்படும்.இத்திட்டத்தின்படி, இம்மாதத்துக்கான குறைதீர்வு முகாம் நேற்று (10-ம் தேதி) நடைபெற்றது. இதில், வருங்கால வைப்பு நிதி தொடர்பான அனைத்துப் புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டது.


இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா