Skip to main content

டி.என்.பி.எஸ்.சி., சான்றிதழ் சரிபார்ப்பு நவீனமயம்

தமிழக சுகாதார துறையில், மகப்பேறு மற்றும் குழந்தை நல அலுவலர் பதவிக்கான, 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நேற்று போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
சென்னையில், 21, உட்பட 32 மையங்களில், தேர்வுகள் நடந்தன. சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், தேர்வு நடைமுறையை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்
பிரமணியன், ஆய்வு செய்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுவதும், 12 ஆயிரத்து, 149 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வின், 'கீ' விடைத்தாள் ஒரு வாரத்திலும், தேர்வு முடிவு ஒரு வாரத்திலும் வெளியாகும்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுத, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு, குறிப்பிட்ட அளவு தேர்வு கட்டண சலுகை உள்ளது. பட்டியலினத்தவருக்கு முழுவதும் சலுகை உள்ளது. இந்த சலுகை தொடர்பாக, விண்ணப்பதாரர்கள் குறிப்பிடும் விவரங்களில், சில நேரங்களில் தவறுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

மேலும், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் தேர்வர்கள் ஒருமுறை பதிவில் (ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன்) அளித்துள்ள கல்வித் தகுதி விவரங்கள், தேர்வு முடிவின் போது, சான்றிதழ் சரிபார்ப்பில் மாறுதலாக உள்ளது. இதைத் தடுக்க, 'டேஷ் போர்ட்' என்ற புதிய முறை விரைவில் அறிமுகமாகும். டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் சுயவிவரப் பக்கம் உருவாக்கப்படும். தேர்வர்கள் தங்களின் பெயர், கல்வித்தகுதி உள்ளிட்டவற்றை, 'அப்டேட்' செய்யலாம். இந்தத் தகவல் அடிப்படையில், தேர்வர்களின் கட்டண சலுகை குளறுபடியின்றி கணக்கிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு