Skip to main content

பாதுகாப்பு இல்லாத பள்ளிக்கும் அங்கீகாரம் விதிமுறை தளர்ந்தது!

அரசு நிர்ணயித்த அளவுக்கு, இடவசதி இல்லாத பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் பணி துவங்கியுள்ளது. இதனால், போதிய வசதிகள் இல்லாமல், சிறிய இடத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு விமோசனம் கிடைத்துள்ளது.தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகள் எவ்வளவு பரப்பளவில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என, தமிழக
அரசு, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

பரப்பளவு 
மாநகராட்சி - ஆறு கிரவுண்ட்; மாவட்ட தலைநகர் - எட்டு கிரவுண்ட்; நகராட்சி - 10 கிரவுண்ட்; பேரூராட்சி - ஒரு ஏக்கர்; ஊராட்சி - மூன்று ஏக்கர் என, பரப்பளவு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.


கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்ட பின், நீதிபதி சம்பத் கமிட்டி அளித்த பரிந்துரைப்படி, குறைந்த பரப்பளவில் செயல்படும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால், 746 மெட்ரிக் பள்ளிகள், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கீகாரமின்றி இயங்கி வருகின்றன.
இந்நிலையில், சட்டசபையில் பள்ளிக் கல்வி அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 'குறைந்த பரப்பளவில் இயங்கும் பள்ளிகளுக்கும், அங்கீகாரம் வழங்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, மெட்ரிக் இயக்குனர் கடிதம் எழுதியிருந்தார். 

அரசாணை
அதன் அடிப்படையில், பள்ளிகளுக்கான பரப்பளவு நிபந்தனையை தளர்த்தி அங்கீகாரம் வழங்க, பள்ளிக்கல்வி துறை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக, இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, குறைந்த பரப்பளவில் இயங்கும், 746 பள்ளிகளுக்கும், அங்கீகாரம் வழங்கும் பணி துவங்கியுள்ளது. 

அங்கீகாரம் வழங்குவதற்கு முன், பள்ளிக் கட்டடத்துக்கு உள்ளாட்சி திட்ட அனுமதி பெறப்பட்டிருக்கிறதா என்பதை மட்டும் ஆய்வு செய்ய வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், திட்ட அனுமதி இல்லாவிட்டாலும், அங்கீகாரம் வழங்க, மெட்ரிக் துறை உயரதிகாரிகள், வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், பெட்டிக்கடை போல, சிறிய குறுகலான தெருக்களில், அடிப்படை பாதுகாப்பு வசதி இல்லாமல் செயல்படும் பள்ளிகளும், அங்கீகாரம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அவற்றில், பல பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கப்பட்டு விட்டதாக, மெட்ரிக் வட்டாரங்கள் கூறுகின்றன. - நமது நிருபர் -


அரசு மீது வழக்கு? 

குழந்தைகள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, பெற்றோரின் கருத்தைக் கேட்காமல், மிகவும் குறுகலான இடங்களில் இருக்கும் பள்ளிகளுக்கும், அங்கீகாரம் அளிப்பதால், கும்பகோணம் சம்பவம் போல் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
இதுதொடர்பாக, வழக்குத் தொடரவும், சில தொண்டு நிறுவனங்கள் களம் இறங்கியுள்ளன.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு