Skip to main content

மாணவர்களின் கற்றல் திறன் பிரச்னைகளைக் களைய யோசனை


மாணவர்களின் கற்றல் திறன் பிரச்னைகளை ஆசிரியர்கள் களைய வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருது பெற்ற சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் பி.ஜார்ஜ் பால் வலியுறுத்தினார்.



ஆசிரியர் தினத்தையொட்டி, புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் சென்னை எழும்பூரில் உள்ள தொன் போஸ்கோ மெட்ரிகுலேசன் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் பி.ஜார்ஜ் பாலுக்கு நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.


விருது பெற்றது குறித்து பி.ஜார்ஜ் பால் கூறியதாவது:தொன் போஸ்கோ பள்ளியின் தாளாளர் ஜான் அலெக்ஸாண்டர், பள்ளியின் முன்னாள் முதல்வர்கள் பெஞ்சமின், ஜான் சந்தோசம், எல்.இருதயராஜ் ஆகியோர் என்னை ஊக்குவித்தனர். வார விடுமுறை நாள்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவது வழக்கம்.


அந்த நேரத்திலும் எனக்கு ஆதரவாக இருந்த எனது மனைவி, குழந்தைகளுக்கும், நான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் சிறப்பான ஒத்துழைப்புக் கொடுத்த உடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் எந்த நேரத்திலும் பதிலளிக்கத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார் அவர்.இவர் ஏற்கெனவே தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை கடந்த 2012-ஆம் ஆண்டில் பெற்றுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது. 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்