Skip to main content

ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்துக்கு: இ-சேவை மையங்களில் புதிய வசதி

ஆதார் அட்டை வைத்திருப்போர் இ-சேவை மையங்களில் தங்களது இ-மெயில் மற்றும் செல்போன் எண்களை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தலைமைச்யெலகம், 264 வட்டாட்சியர் அலுவலகங்கள்,
சென்னை  மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள், 54 கோட்ட அலுவலகங்கள் மற்றும் சென்னை மற்றும் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என மொத்தம் 337 இடங்களில் அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.

        இச்சேவை மையங்கள் மூலமாக தமிழக அரசின் வருவாய்த் துறை மற்றும் சமூக நலத்துறை சார்ந்த 13,28,647 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுமட்டுமின்றி இச்சேவை மையங்கள் மூலமாக 4,36,352 நபர்களுக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த 337 சேவை மையங்களிலும் ஆதார் அட்டையினை பதிவு செய்யும்போது வழங்கப்பட்ட கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை மாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரியினை மாற்றம் செய்ய விரும்புவோர் இச்சேவை மையங்களை அணுகி தங்களது புதிய கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றை பத்து ரூபாய் செலுத்தி மாற்றம் செய்துக்கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்தப்புதிய சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா