Skip to main content

சான்றிதழ் சரிபார்ப்பு இல்லாமலே பணிநியமன ஆணை: டி.என்.பி.எஸ்.சி

TNPSC:சான்றிதழ் சரிபார்ப்பு இல்லாமலே பணிநியமன ஆணை: டி.என்.பி.எஸ்.சி தளத்தில் புதியமுறை அறிமுகம்
டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் "candidate's dash board" என்ற சுய விவர பக்கம் அடுத்த வாரம் முதல் அமல்படுத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி-யின் தலைவர் பொறுப்பிலுள்ள பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு அளித்துள்ள பேட்டியில், கூறியிருப்பதாவது:


டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் "candidate's dash board" அமல்படுத்தப்படவுள்ளது. முதலாவதாக இதன் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பில் ஏற்படும்காலதாமத்தை தவிர்க்க முடியும். ஏன் என்றால் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் சான்றிதழ்களை அவர்களே பதிவேற்றம்(upload) செய்துவிடாலாம். இதனால் அவர்களைமீண்டும் அழைத்து சான்றிதழ் சரிபார்க்கும் வேலை எங்களுக்கு இல்லை.இரண்டாவது ஆன்லைன் விண்ணப்பத்தில்(application) ஒரு தகவல்களை சொல்லிவிட்டு சான்றிதழ் சரிபார்ப்பின் போது மற்றொன்றை எடுத்துவருவார்கள். எனவே அதில் ஏற்படும் தவறுகள் எல்லாம் தவிர்க்கப்படும்.மூன்றாவதாக இலவசமாக கொடுக்கக்கூடிய(free chance) வாய்ப்புகளை கண்டறியமுடியும்.


உதாரணமாக முன்னாள் ராணுவத்தினருக்கு இரண்டு இலவச வாய்ப்புகள் கொடுக்கப்படும். அதற்கு மேற்பட்டு அந்த இலவச வாய்ப்புகளை தவறுதலாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு இது பயன்படும்.நான்காவதாக ஒரு தேர்வுக்கு இரண்டு அப்ளிகேசன் போடுவது தவிர்க்கப்பபடும். உதாரணமாக குரூப்1 குரூப்2 தேர்வினை எடுத்துக்கொண்டோமானால், விண்ணப்பதாரர்கள் ஒரு பதவிக்கு இரண்டு முறை விண்ணப்பிப்பது. ஒன்று கட்டணம் செலுத்தி விண்ணப்பிப்பது, மற்றொரு விண்ணப்பத்தில் கட்டணம் கட்டாமல் விண்ணப்பிப்பது, உள்ளிட்ட தவறுகள் தவிர்க்கப்படும் என்றார்.விண்ணப்பதாரர் சுய விவர பக்கம் ("candidate's dash board") அடுத்த 10 நாட்களுக்குள் அமல்படுத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தாங்களாகவே சான்றிதழ்களை பதிவேற்றம்(upload) செய்து கொள்ளலாம் என்றார்.​ 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்