Skip to main content

கவுன்சிலில் பதிவு செய்யாததால் 915 நர்சுக்கு வேலை 'அவுட்'


மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்தவர்களில், 915 பட்டதாரிகள், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யாததால், அவர்களின் விண்ணப்பங்களை, தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நிராகரித்துள்ளது.

தமிழக பொது சுகாதாரத் துறையில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அதிகாரி பணிக்கான, 89 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும், 20ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கான அனுமதிச் சீட்டு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


விண்ணப்பித்தவர்களில், 44 பேருக்கு சரியான கல்வித் தகுதியில்லாததால், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், கல்வித்தகுதி இருந்தும், 915 பேரின் விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. அதில், 'தேர்வு எழுத தேவையான கல்வித் தகுதியான, பி.எஸ்சி., நர்சிங் படித்திருந்தும், 915 பேரும், அரசு வேலைக்கான நர்சிங் கவுன்சிலில் தங்களின் பட்டப்படிப்பை பதிவு செய்யவில்லை. 

அதனால், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன' என, தெரிவித்துள்ளது. நர்சிங் முடித்தவர்கள், அரசுப் பணியில் சேர, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும் என்பது, தமிழக செவிலியர் பணிகள் சட்டப்படி கட்டாயமாகும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்