Skip to main content

52 தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 52 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
 தமிழகம் முழுவதும் மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் 75-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமல் இருந்தன.

இந்த நிலையில், பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் இருந்த 52 தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
 இதன்மூலம் கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், சங்ககிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும், திருநெல்வேலி, வேலூர், மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களும், தஞ்சாவூர், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
 இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. 
 அதேநேரத்தில், காலியாக உள்ள 25 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், 16 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலான பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என அந்தச் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்