Skip to main content

மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை டிச.31க்கு முன் வழங்க உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை இலவசமாக மின்னணு முறையில் டிச.,31 முன் வழங்க வருவாய் நிர்வாக ஆணையர் கிரிஜா வைத்தியநாதன், கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 


தாலுகா வாரியாக இதற்கான ஒருங்கிணைப்பு மையங்கள் செப்.,30க்குள் தேர்வு செய்யப்பட உள்ளன. கல்வி உதவித்தொகை, உயர்கல்விக்காக
பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், பெற்றோரின் வருமானச்சான்றிதழ் ஆகிய மூவகைச்சான்றுகள் தேவைப்படுகின்றன. சில நேரங்களில் இவை தாமதமாக கிடைப்பதால் உரிய காலத்தில் சமர்ப்பிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் தாலுகா வாரியாக ஒருங்கிணைப்பு மையங்களை அமைத்து டிச.,31க்கு முன் ஆறாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக இந்த மூவகை மின்னணு சான்றிதழை வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் (பொறுப்பு) கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இச்சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்களிடம் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஒரே விண்ணப்பம் தரப்பட்டு நிரப்பி பெறப்படும். 3,000 முதல் 4,000 வரை மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கம்ப்யூட்டர், ஸ்கேனர், பிரின்டர், இணையதள வசதியுள்ள பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையங்களாக செப்.,30க்குள் 

தேர்வு செய்யப்படும். அங்கு தலைமையாசிரியர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.தினமும் 100 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும். விபரங்கள் சரிபார்க்கப்பட்டு டிச.,31க்கு முன் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இதற்கு கட்டணம் கிடையாது. இதன்மூலம் தாலுகா அலுவலகத்திற்கு செல்வது தவிர்க்கப்படும். இப்பணிகள் கலெக்டர், முதன்மைக்கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் நடக்கும், என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்