Skip to main content

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வர்கள் ஆன்லைனில் ஹால் டிக்கெட் பெறலாம்.

அரசு தேர்வுத்துறை இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி நேற்று 
வெளியிட்ட செய்திக் குறிப்பு: செப்டம்பர், அக்டோபர் எஸ்எஸ் எல்சி துணைத் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதி திட்டத்தில் ஆன்லைனில்
விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் உட்பட அனைவரும் 19-ம் தேதி (சனிக்கிழமை) முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.tndge.in) இருந்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதேபோல், பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத் தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் 18-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதி விறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்