Skip to main content

டிச.27-இல் "நெட்' தேர்வு

 இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குமான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.  இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விரைவில் அறிவிக்
க உள்ளது.


        நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்கான தகுதியைப் பெறுவதற்கும் "தேசிய தகுதித் தேர்வு' (நெட்) நடத்தப்படுகிறது.
 இந்தத் தேர்வு ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். 
 வரும் டிசம்பர் மாதத்துக்கான தேர்வை டிசம்பர் 27-ஆம் தேதி நடத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பையும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான தேதியும் விரைவில் வெளியிடப்பட உள்ளது என சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி