Skip to main content

பாமக 2016 தேர்தல் அறிக்கை : ஆசிரியர் & அரசு ஊழியர் நலன் !!! முக்கிய அம்சங்கள்:

ஆசிரியர் & அரசு ஊழியர் நலன்:
*புதிய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்தப்படும்.
*7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
*இடைக்கால நிவாரணமாக அடிப்படை ஊதியத்தில் 15% சேர்த்து வழங்கப்படும்.

*அகவிலைப்படியில் 50% அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும்.
*மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.
*அனைத்து நிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் காணப்படும் முரண்பாடுகள் களையப்படும்.
*அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும்.
*பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள், அரசுத் துறைகளில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
*அரசு ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்து சரி செய்வதற்காக அரசுத்துறை செயலாளர் தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும்.


கல்வி:


*கல்விக்கான நிதி ஒதுக்கீடு மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 4% ஆக அதிகரிக்கப்படும். அதாவது கல்விக்கு இப்போது ஒதுக்கப்படும் நிதி இரட்டிப்பாக்கப்படும்.
*மழலையர் வகுப்பு முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். அதன்படி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயித்துசெலுத்தும்.
*மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசின் பள்ளிகள்தரம் உயர்த்தப்படும். பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருபள்ளித் தர இயக்குனர் நியமிக்கப்படுவார்.
*மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், ஆந்திரம் மாநிலப் பாடத்திட்டங்களில் உள்ள சிறந்த அம்சங்களை கண்டறிந்து அவற்றை உள்ளடக்கிய புதியக் கல்வித் திட்டம் உருவாக்கப்படும். இதற்காக வல்லுனர் குழு அமைக்கப்படும். புதியக் கல்வித் திட்டம் 2017 ஆம் கல்வி ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.
*தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக 9&ஆம் வகுப்பிலிருந்தே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
*- அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணியாற்றும் கணிணி ஆசிரியர்களும், பிற சிறப்பு ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்.
*தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வகை செய்யப்படும்.
*திறன் சார் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும். அதன்படி 11 ஆம்ஆண்டில் வழக்கமான பாடங்களுடன் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிப் பாடம் கூடுதலாக சேர்க்கப்படும். அது மாணவர்கள் படிக்கும் விருப்பப்பாடம் சார்ந்ததாக இருக்கும்.
*பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் பள்ளி மேலாண்மை குழுக்களாக மாற்றப்படும். பள்ளியின் தேவைகள் தொடர்பான முடிவுகளை எடுத்து செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்படும்.
*தமிழ் வழிக் கல்வி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.


உயர்கல்வி:


*பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் திறன்சார் கல்வி கல்லூரிகளுக்கும், பல்தொழில்நுட்ப கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்படும். கல்லூரிப் படிப்பு முடிக்கும் போது வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
*ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு பல்கலைக் கழகம் தொடங்கப்படும்.
*தமிழகத்தில் 6 ஒருமை பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.ஆராய்ச்சிகளை செய்வது மட்டுமே இவற்றின் முதன்மை நோக்கமாக இருக்கும்.
*அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியும், ஒரு சட்டக்கல்லூரியும் தொடங்கப்படும்.
*தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களும் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொருமண்டலத்திலும் ஐ.ஐ.டி,க்கு இணையான ஓர் உயர் தொழிட்நுட்ப கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.
*பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அனைத்தும் அரசுக்கல்லூரிகளாக மாற்றப்படும். அவற்றில் குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களாக்கப்படுவர். 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன