பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு, வரும், 28ம் தேதி துவங்கி, அக்டோபர், 6ல் முடிகிறது. இதில், பிளஸ் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட், வரும், 18ம் தேதி முதல், அரசுத் தேர்வுத் துறையின், www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள், விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஹால் டிக்கெட்டை
பதிவிறக்கம் செய்யலாம் என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி