Skip to main content

அக்டோபரில் குரூப் 1 தேர்வு பயிற்சி, பாரதியார் பல்கலையில் நடக்கிறது


டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், பாரதியார் பல்கலையில் அக்., மாதம் நடக்கிறது.துணை கலெக்டர், டி.எஸ்.பி, உதவி ஆணையர் வணிகத்துறை, மாவட்ட பதிவாளர் உட்பட, தமி
ழகத்தில் காலியாக உள்ள, 74 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள், நவ.,11ம் தேதி நடத்தப்படுகிறது.  மாநிலம் முழுவதும், 2 லட்சத்து 41 ஆயிரத்து, 971 பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தேர்வு எழுதுவோருக்கான முழு நேரப் பயிற்சியை வழங்க, பாரதியார் பல்கலை திட்டமிட்டுள்ளது.


ஆர்வமுள்ளவர்கள், www.b--u.ac.in/news.asp எனும் பல்கலை இணையதளத்திலுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, மாநில மத்திய அரசு தேர்வு பயிற்சி மையம், பாரதியார் பல்கலை, கோவை - 641 046 எனும் முகவரிக்கு, வரும் 28ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2