Skip to main content

செப்.18-ல் வெளியாகிறது பி.எட். கட் ஆப் மதிப்பெண் பட்டியல்


அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 1,777 பி.எட். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ள
னர்.

விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு வருகிற 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் வரை நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு முன்னர் கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை பாரதியிடம் கேட்டபோது, “பாடப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீடு வாரியான கட் ஆப் மதிப்பெண் பட்டியல் 18-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும். கட் ஆப் மதிப்பெண் விவரங்களை www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2