Skip to main content

ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக 10 புதிய விடுதிகள்

ஆதிதிராவிடர், பழங்குடியின கல்லூரி மாணவ, மாணவியர்களுக்காக 10 புதிய விடுதிகள் தொடங்கப்படும் என்று, அந்தத் துறையின் அமைச்சர் என்.சுப்பிரமணியன் அறிவித்தார். சட்டப்பேரவையில் புதன்கிழமை ஆதிதிராவிடர்,பழங்குடியினர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் என்.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்புகள்:2012-இல் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த
சுயநிதிக் கல்லூரியிலும் இலவசக் கல்வி என்ற திட்டத்தினால் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.


இந்த மாணவர்கள் விடுதிகளில் தங்கி கல்வி பயில, 10 புதிய கல்லூரி விடுதிகள் துவங்கப்படும். சென்னையில் முதுகலை மாணவியர் விடுதியும், ஆராய்ச்சி மாணவியர் விடுதியும் அமைக்கப்படும்.திருநெல்வேலியில் சோலைச்சேரியிலும், நாமக்கல்லில் ராசிபுரத்திலும், திருவண்ணாமலையில் செய்யாறிலும், திண்டுக்கல்லில் நிலக்கோட்டையிலும், திருவாரூரில் நன்னிலத்திலும், தருமபுரியில் காரிமங்கலத்திலும் கல்லூரி மாணவியர் விடுதிகள் துவங்கப்படும். கிருஷ்ணகிரியிலும், புதுக்கோட்டையில் புதுப்பட்டியிலும் பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவியர் விடுதிகள் துவங்கப்படும். ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவர்கள் வருமானம் ஈட்டும் வண்ணம், சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகளில் விலையில்லா எம்பராய்டரி தையல் இயந்திரங்கள் ரூ.1 கோடி செலவில் வாங்கி, பயனாளிகளுக்கு வழங்கப்படும்.பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு...பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக 10 புதிய விடுதிகள் ஏற்படுத்தப்படும் என்று, அந்தத் துறையின் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் அறிவித்தார்.பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் வெளியிட்ட அறிவிப்புகள்:


கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக 5 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், 3 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், ஒரு சீர்மரபினர் நல விடுதி, ஒரு சிறுபான்மையினர் நல விடுதி என மொத்தம் 10 புதிய கல்லூரி விடுதிகள், 1,000 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மொத்தம் ரூ. 2.82 கோடி செலவில் துவங்கப்படும்.பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் நல விடுதிகளில் மின் பழுது உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் ரூ. 2 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு