Skip to main content

அக்.1 முதல் 2 எம்.பி. அதிவேகத்தில் இணையதள சேவை: பி.எஸ்.என்.எல். லில் அறிமுகம்


பி.எஸ்.என்.எல். இணையதள சேவையை, அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 2 எம்.பி. அதிவேகத்தில் வாடிக்கையாளர்கள் பெறலாம் என தமிழக தொலைபேசி வட்டம் அறிவித்துள்ளதுஇதுகுறித்து தமிழக தொலைபேசி வட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:பி.எஸ்.என்
.எல், குறைந்தபட்சம் 512 கே.பி.பி.எஸ்.(ஓக்ஷல்ள்) வேகத்தில் இணையதள சேவையை வழங்கி வருகிறது.


அதிக வாடிக்கையாளர்களை கவர, தனது இணைய தள சேவையின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.அதன்படி, பி.எஸ்.என்.எல். நிறுவன இணையதள சேவையின் வேகம் 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் குறைந்தபட்சம் நொடிக்கு 2எம்பிபிஎஸ் அதிவேகத்தில் இணையதள சேவையை பி.எஸ்.என்.எல். வழங்கும். எந்தவிதமான கூடுதல் கட்டணம் இன்றி, அதிக வேகத்தில் இணையதள சேவையை வாடிக்கையாளர்கள் பெறலாம்.


புதியத் திட்டம் அறிமுகம்:


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், -புது வசந்தம்- என்கிற புதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்கள் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் (ப்ண்ச்ங் ற்ண்ம்ங் ஸ்ஹப்ண்க்ண்ற்ஹ்) வசதியைப் பெற முடியும்.விநாயகர் சதுர்த்தி நாளான வியாழக்கிழமை (செப் 17) முதல் திட்டம் அறிமுகமாகிறது. திட்டத்தில் உள்ளூர், வெளியூர் அழைப்புகளுக்கு வினாடிக்கு 80 பைசா வசூலிக்கப்படும். முதல் மூன்று மாதங்களுக்கு, 1,000 வினாடி அளவுக்கு இலவச அழைப்பு கிடைக்கப்பெறும். மூன்று மாதங்களுக்கு, மாதத்துக்கு 25 என்ற அளவில் குறுஞ்செய்தி, 50 எம்.பி அளவுக்கு ஒரு மாதம் இணையதள வசதி ஆகியவற்றையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.இந்தத் திட்டத்தில் இணைய விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ. 15 செலுத்தினால் போதுமானது (சிம் கார்டு கட்டணமும் அடங்கும்). கூடுதலாக பல்வேறு சிறப்பம்சங்களையும் வாடிக்கையாளர்கள் பெறலாம் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி