Skip to main content

TNPSC : அரசு பணியாளர் தேர்வாணையம் 'இன்டர்வியூ' தேதிகள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது: வேளாண் துறை உதவி அதிகாரி பணிக்கு, ஏப்ரல் மாதம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள, 417 காலியிடங்களுக்கு, 3,136 பேர் கலந்து கொண்டனர்.
அதில் தேர்ச்சி பெற்ற, 715 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட இருக்கிறது.

அதற்கான பட்டியல், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் உள்ளது. பட்டியலில் உள்ளவர்களுக்கு, செப்., 7ம் தேதி முதல், 16ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்க்கப்படும். அதில் தேர்வு பெறுபவர்களுக்கு, நேர்காணலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் பதவிக்கு 117 காலியிடங்கள் இருக்கின்றன. இதற்கு, பிப்ரவரியில் எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்ச்சி பெற்றவர் களுக்கு முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும், 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதிபெறாத மற்றும் வராதவர்களுக்கு பதில், புதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் பதிவு எண்களை இணையதளத்தில் பார்க்கலாம். அவர்களுக்கு வரும், 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்