Skip to main content

அரசு ஊழியருக்கு 'ஆதார்' ஏற்பாடு

தமிழக கருவூல கணக்குத் துறை இயக்குனர் அறிக்கை:தமிழகம் முழுவதும் தாலுகா, மாநகராட்சி மண்டல அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில், 'பயோ மெட்ரிக்' தகவல் சேகரிப்பு மையம் இயங்கி வருகிறது. இந்த மையங்களில், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களின் தகவல் சேகரிக்கப்பட்டு, 'ஆதார் எண்' வழங்க,
நடவடிக்கை எடுக்கப்படுகிறது.தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், இதுவரை பதிவு செய்யாத, சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள், உரிய படிவத்தை பூர்த்தி செய்து, இந்த மையங்களில், சமர்ப்பிக்க வேண்டும்.
ரேஷன் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றில், தங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.ஆதார் எண்ணுக்காக ஏற்கனவே பதிவு செய்தவர்கள், தங்களுக்கான அட்டை தயராகி விட்டதா என்பதை அறிய, www.resident.uidai.net.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 'மின் ஆதார்' அட்டை பதிவிறக்கம் செய்ய, www.eaadhaar.gov.in என்ற வலைதளத்துக்கு செல்ல வேண்டும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி