Skip to main content

தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு ஆய்வுக்கட்டுரை தலைப்பு அறிவிப்பு


எட்டாவது தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வுக்கட்டுரைக்கான மையப் பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சுந்தர் கூறியதாவது:கணிதம் மற்றும் அறிவியல் கற்பிக்கு
ம் ஆசிரியர்களுக்கு புதிய கற்றல் முறைகளையும், அறிவியல் கல்விக்கான புதிய ஆலோசனைகளை வெளிப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவுமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக கடந்த 2003 முதல் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை, தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு ஆகிய அமைப்புக்களால் தேசிய ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த நிகழ்வை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது. இந்த ஆண்டிற்கான மையப் பொருளாக 'செயல்பாடுகளின் மூலம் அறிவியல் கற்றல்,' என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. துணைப் கருப்பொருள்களாக செலவில்லாத மற்றும் புதுமையான கற்றல் கற்பித்தல் கருவிகள், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை பள்ளிகளில் இருந்து சமூகத்திற்கு கொண்டு செல்வதில் எதிர்கொள்ளும் சவால்கள், சுயசார்பிற்கான அறிவியல், புதுமையான மதிப்பீட்டு உத்திகள், புதுமையான அறிவியல் தொழில்கல்வி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் போட்டியில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், அறிவியல் இயக்க நிர்வாகிகள், ஆசிரிய பயிற்றுனர்கள்,விஞ்ஞானிகள் பங்கேற்கலாம்.

ஆய்வுச்சுருக்கம் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி செப்டம்பர் 5, ஆய்வுக் கட்டுரைகள் முடிவுகள் செப்டம்பர் 15 ல் வெளியிடப்படும். தேசிய அளவிலான மாநாடு டிசம்பரில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும்.ஆய்வுக்கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

A.P.Deshpande, NationalConvenor, 8 th NTSC, c/o Marathi Vidnyan Parishad, Vidnyan Bhavan, V.N. Purav Marg, Sion-Chunabhatti (E), MUMBAI 400 022 E.mail : mvp@8thntsc.org indub.puri@nic.in

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா