Skip to main content

இரு பாடங்களில் சறுக்குவது ஏன்கல்வித்துறை இயக்குனர் கேள்வி

“பிளஸ் 2 தேர்வில், வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களில், தேர்ச்சி விகிதம் சற்று குறைவாக உள்ளது. இதை சரிசெய்ய, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது,'' என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர
முருகன் பேசினார்.

நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி முகாம், நேற்று சேலத்தில் நடந்தது. இதில், இயக்குனர் ராமேஸ்வர முருகன் பேசியதாவது:

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம், ஆண்டுதோறும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழக தேர்ச்சி விகிதம், வியக்கத்தக்கதாக உள்ளது. எனினும், வணிகவியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களில், தேர்ச்சி விகிதம் சற்று குறைவாக உள்ளது.


மாணவர்களுக்கும், மாணவியருக்கும் இடையிலான தேர்ச்சி விகிதமும், 10 சதவீதம் வரை, வேறுபாடு உள்ளது. இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்யவும், கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில், தேர்ச்சி விகிதத்தை, 100 சதவீதமாக அதிகரிக்கவும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்