Skip to main content

அரசு ஊழியர்கள் கட்டாயம் தன் பிள்ளைகளை அரசு பள்ளியிலதான் படிக்கவைக்கவேண்டும்

அரசு ஊழியர்கள் கட்டாயம் தன் பிள்ளைகளை அரசு பள்ளியிலதான் படிக்கவைக்கவேண்டும் அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு
உ.பி., மாநிலத்தில் அரசு பணியிலுள்ளவர்கள் அனைவரும், தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என, அலகாபாத் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக உமேஷ் குமார் சிங்
என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுதிர் அகர்வால், உ.பி., மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும், தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் தான் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்ப்பதன் மூலம் அரசுப் பள்ளிகள் நன்றாக இயங்கும் வாய்ப்புகள் உருவாகும்.

அதை மீறி தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பினால், அப்பள்ளியில் அவர்கள் அளிக்கும் பீஸ் எவ்வளவோ, அவ்வளவு பணத்தை அரசு கருவூலத்துக்கு செலுத்த வேண்டும். மேலும் அரசின் மூலம் அவர்களுக்கு வழங்குப்படும் அனைத்து சலுகைகளையும் ரத்து செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.

இதுதொடர்பாக அடுத்த 6 மாதத்தற்குள் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தலைமை செயலரிடம், அலகாபாத் ஐகோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி