Skip to main content

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இடஒதுக்கீடு குறித்து விவாதம்:மாணவர்களுக்கு அரசு உத்தரவு

அம்பேத்கரின், 125வது பிறந்த நாளை முன்னிட்டு, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 'மாதிரி பார்லிமென்ட்' நடத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டு உள்ளது. அப்போது, கீழ்கண்ட தலைப்புகளில், மாணவர்கள் விவாதம் நடத்த வேண்டும் எனவும், அந்த உத்தரவில் கூறப்பட்டு உ
ள்ளது.

வழங்கப்பட்டுள்ள தலைப்புகள்:
 பேச்சுரிமை முறையாக அமலாகி இருக்கிறதா?
 பழங்குடியினரின் கலாசார மரபுகளை பாதுகாக்கவும், வாழ்க்கை முறையை உயர்த்தவும், அரசு செயல்படுத்தும் திட்டங்கள் சரியா?
 கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில், அனைத்து மக்களுக்கும் சமமான இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா?
 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, இன்னும்
கூடுதலாக ஊக்கத்தொகை வழங்க வேண்டுமா?
 சட்டசபை மற்றும் பார்லிமென்டில், எழுத்தளவில் மட்டுமே பெண்களுக்கான உரிமைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதா?
 தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், குழந்தைகளை தவறான வழிக்கு திசை திருப்பும்
தகவல்களை, எப்படி கட்டுப்படுத்துவது?
 நிலம் இல்லாத, விவசாய தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டும்?
 நுகர்வு திறன் அதிகரிப்பால், மக்களின் வாழ்க்கை முறை மற்றும் முன்னேற்றத்தில், தவறான எதிர்விளைவு ஏற்படுகிறதா?

இந்த தலைப்புகளில், மாணவர்கள் நடத்தும் விவாதங்களை தொகுத்து, சி.பி.எஸ்.இ., தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என, பள்ளிகளுக்கு
உத்தரவிடப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்