Skip to main content

பள்ளி கேன்டீன்களில் பீட்ஸா, பர்கர் சிப்சுக்கு விற்க தடை


 பீட்ஸா, பர்கர், சிப்ஸ், கேக், குளிர்பானம், பிஸ்கட் போன்ற நொறுக்குத்தீனிகளை, நாடு முழுவதும் உள்ள பள்ளி கேன்டீன்களில் விற்க, விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சகம் நியமித்த, 10 உறுப்பினர்கள் உயர்மட்
டக்குழு, பள்ளிகளில் விற்கக்கூடிய உணவு பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.

இறுதி முடிவு எடுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ள, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாடு முழுவதும் உள்ள பள்ளி கேன்டீன்களில், இந்திய உணவு வகைகளை மட்டுமே விற்க வேண்டும். பீட்ஸா, பர்கர், சிப்ஸ், கேக், பிஸ்கட், இனிப்பு வகை, சாக்லேட், குளிர்பானம் போன்ற நொறுக்குத்தீனிகளை விற்கக் கூடாது. பள்ளிகள் இயங்கும் நேரத்தில், பள்ளியிலிருந்து, 200 மீட்டர் துாரம் வரை, நொறுக்குத்தீனிகளை விற்க தடை விதிக்க வேண்டும். 
நொறுக்குத்தீனிகளால், பள்ளி குழந்தைகளுக்கு, உடல் பருமன், நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் மனரீதியிலான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால், அவர்களுக்கு தன்னம்பிக்கை குறைபாடு ஏற்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா