Skip to main content

உயர் கல்வியில் சேருபவர்களில் சிறுபான்மையினர் எத்தனை பேர்?


உயர் கல்வி நிறுவனங்களில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மாணவர்கள் எத்தனை பேர் படிக்கின்றனர் என்கிற புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

2014-15-ஆம் கல்வியாண்டுக்கான இந்த விவரத்தை மாநில வாரியாக
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அதன்படி, தமிழகத்தில் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் மொத்தமுள்ள 2 லட்சத்து 84 ஆயிரத்து 22 பேரில் சிறுபான்மையின மாணவர்கள் 19,315பேர் ஆவர். அதாவது 6.6 சதவீதம் பேர் சிறுபான்மையினர். எம்.சி.ஏ. கல்லூரிகளில் (ஸ்டேன்ட் அலோன்) படிக்கும் 3,258 பேரில் 222 பேர் சிறுபான்மையின மாணவர்கள்.

தமிழகம் முழுவதுமுள்ள 384 மேலாண்மைக் கல்லூரிகளில் 17,532 பேர் படிக்கின்றனர். இவர்களில் 1,308 பேர் சிறுபான்மையின மாணவர்கள். 39 மருந்தாளுநர் (பார்மசி) கல்லூரிகளில் படிக்கும் 2,815 பேரில் 325 பேர் சிறுபான்மையினர் ஆவர்.

11 கட்டடவியல், நகர திட்டமிடல் கல்லூரிகளில் படிக்கும் 801 பேரில் 99 பேர் சிறுபான்மையின மாணவர்கள். 7 ஹோட்டல் மேலாண்மை, கேட்டரிங் கல்லூரிகளில் படிக்கும் 132 பேரில் 11 பேர் சிறுபான்மையின மாணவர்கள் என்பது குறிப்
 பிடத்தக்கது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்