Skip to main content

காஞ்சிபுரம்,மாவட்ட கருவூலத்தில் உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மாவட்ட கருவூல அலகில், காலியாக உள்ள 4 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கருவூல துறை இணை
இயக்குனர் காத்தவராயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


தமிழ்நாடு கருவூலக் கணக்கு துறையின், காஞ்சிபுரம் மாவட்ட கருவூல அலகில், காலியாக உள்ள 4 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, இன சுழற்சிமற்றும் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் விதவை, பிற்படுத்தப்பட்டோரில் விதவை, பொது ஆகியபிரிவினருக்கு, 32 வயதும், பொதுப் பிரிவினருக்கு 30 வயதும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


விண்ணப்பதாரர்கள், ஜூலை 1-ஆம் தேதியன்று, நிர்ணயம் செய்யப்பட்ட வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான கல்வித் தகுதி, 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த பணிக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள், இணை இயக்குனர், மாவட்ட கருவூலம், ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி