Skip to main content

பள்ளிகளில் படைப்பாற்றல் கல்வி மீண்டும் வருமா?

மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் படைப்பாற்றல் கல்வியின் செயல்பாடுகள்குறித்து மறுஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தின் உதவியுடன், 2008ல் படைப்பாற்றல்
கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.


ஆறு முதல் எட்டாம்வகுப்பு மாணவர்களின், தனித்திறமையை கண்டறிந்து, அதில் முழு ஈடுபாட்டுடன், திறமை உடையவர்களாக மாற்ற வேண்டும்; பாடத் திட்ட முறைகள், அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளை நடைமுறை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு கல்வி கற்றுதர வேண்டும், என தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஒரு சில பள்ளி ஆசிரியர்கள் சிரத்தையுடன், படைப்பாற்றல் குறித்து மாணவர்களுக்கு அவ்வப்போது எடுத்துரைத்தாலும் பெரும்பாலோனோர் ஆசிரியர்கள் இதனை கவனிக்க தவறினர். ஆசிரியர்களில் ஒரு தரப்பினர், ஒரு பாடவேளை 45 நிமிடம் கொண்டது; பாட அறிமுகம், விளக்கம், வருகைப் பதிவேடுகளுக்கு 20 நிமிடம் சரியாகி விடுகிறது. மீதமுள்ள நேரத்தில் பாடங்களை கற்பிக்க நேரம் போதியதாக இல்லை. இத்தகைய நிலையில் படைப்பாற்றல் கல்வி விதிமுறைப்படி பாடம் நடத்துவது சிரமமானது; அனைத்து பாடங்களையும் படைப்பாற்றல் கல்வி மூலம் கற்பிக்க வேண்டும் என்பது சாத்தியமில்லை, என்கின்றனர்.


ஆசிரியர்- மாணவர் இடையே தெளிவான ஒருங்கிணைப்பு, புரிதல் இருந்தால் மட்டுமே படைப்பாற்றல் கல்விசாத்தியம்; கல்வித்துறையால் திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டும், சரியாக மாணவர்களிடம் சென்று சேராமல் உள்ளது. பல தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்சிறப்பான முறையில் மாணவர்களிடம் இதனை எடுத்துரைக்கவில்லை. திட்டத்தின் செயல்பாடு குறித்து விரிவான மீளாய்வு பணி மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா