Skip to main content

முக்கிய அரசாணைகள்.....

அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?

அரசாணை நிலை  எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை  நாள்.17.2.89ன்படி மாநில அரசுப்பணிகளில் ஒவ்வொரு பதவியிலும் 30%மகளிர் நியமனம் செய்யப்பட வேண்டும். மீதம் உள்ள 70% பொது
வானது ஆகும்.

ஆசிரியர் வருங்கால  வைப்புநிதியில் (TPF) இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் தற்காலிக முன்பணமாக பெறலாமா?

அரசாணை நிலை  எண்.381 நிதித்துறை  நாள்.30.9.2010ன்படி ஆசிரியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும்  தற்காலிக  முன்பணமாக ரூபாய் 2,50,000,  மட்டுமே பெற முடியும்.


-----------------------

அரசுப்பணியில் சேர்ந்த தகுதிகாண் பருவத்தினருக்கு ஈட்டிய விடுப்பு எவ்வாறு இருப்பு வைக்கப்படுகிறது?

அரசாணை நிலை  எண்.157,  பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை  நாள்.24.6.94ன்படி தகுதிகாண் பருவத்தினருக்கு ஒவ்வொரு முடிவுற்ற 2மாதங்களுக்கும் 2 1/2 நாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு இருப்பு வைக்கப்படுகிறது.

-------------------

உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பணியை துறவு செய்துவிட்டு அரசு பணியில் சேரும்போது அவருக்கு பழைய ஊதியம் கிடைகுமா?

அரசாணை நிலை எண்.536 கல்வித்துறை நாள்.13.04.1966 ன்படி உதவி பெறும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பணியை துறவு செய்து விட்டு அரசு பள்ளியில் பணியில் சேரும்போது பணியேற்கும் பதவிக்குரிய ஊதிய விகிதத்தில்  ஊதியம் வழங்கப்படும்.

-----------------------
தகுதிகாண் பருவத்தில் உள்ள ஆசிரியர் ஒருவருக்கு பதவி உயர்வு அளிக்கலாமா?

அடிப்படை விதிகள் 36(0) மற்றும் அரசாணை எண்.21, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 23.1.96ன் படியும் தகுதிகாண் பருவத்தினருக்கு கண்டிப்பாக பதவி உயர்வு வழங்கக்கூடாது. என்று மேற்கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

------------------

வருங்கால வைப்புநிதி மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா?

அரசாணை எண்.461, நிதித்துறை நாள்.22.9.2009ன்படி அடிப்படை ஊதியம், தர ஊதியம், சிறப்புஊதியம், தனிஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து 12% தொகை குறைந்த பட்ச சந்தாவாக பிடித்தம் செய்திடவேண்டும். 12%க்கு மேலாக எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்திடலாம். மேலும் சந்தா தொகையை எந்த மாதத்திலும் உயர்த்திக் கொள்ளலாம். குறைக்க வேண்டுமெனில் மார்ச்சு மாதத்தில் குறைத்துக்கொள்ளலாம்
-----------------------

அரசுப்பணிகளில் பணிபுரியும் அலுவலர்கள் பணிப்பதிவேட்டை பார்வையிடலாமா?

அரசாணை நிலை  எண்.281, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை  நாள்.28.07.1993ன்படி ஊழியர்களின் அசல் பணிப் பதிவேட்டுப் பதிவுகளை 6மாதங்களுக்கு ஒருமுறை சரிபார்க்கவும், நகல் எடுத்துக்கொள்ளவும் உரிமை உண்டு.

-------------------------

முழு ஓய்வூதியம் பெற எத்தனை ஆண்டுகள் பணி செய்திருக்கவேண்டும்?

அரசாணை நிலை எண்.496, நிதித்துறை நாள்.1.8.2006ன்படி முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள் பணி செய்திருக்கவேண்டும். இந்த அரசாணை வெளி வருவதற்கு முன்பு 33 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும் என இருந்தது.

குறிப்பு; 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இத் திட்டம் பொருந்தாது.

------------------
குழந்தை பிறந்த நாளிலிருந்து தான் மகப்பேறு விடுப்பு தொடங்குகிறதா??

அரசாணை நிலை எண்.237, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 29.6.93ன்படியும் மற்றும் அடிப்படை விதி101(a)ன்படியும்  மகப்பேறுக்கு முன்னரோ. (அ) மகப்பேறுக்கு பின்னரோ  விடுப்பு அளிக்கலாம். குழந்தை பிறந்த பிறகு தான் விடுப்பு அளிக்கப்படும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

குறிப்பு; அ.நி.எண்.61.பணி.நிர்.சீர் .துறை நாள்.16.6.2011ன்படி180 நாள்கள் விடுப்பு அளிக்கப்படுகிறது.

-------------------------

மருத்துவ விடுப்பை எத்தனை நாட்களுக்குள் மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்?

அரசாணை நிலை  எண்.460, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.21.4.1976ன்படி விடுப்பு வழங்கும் அலுவலர் தேவை ஏற்படும் போது மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றால் மூன்று நாட்களுக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

: தற்செயல் விடுப்பினை பற்றி அறிவோம் !!!

தற்செயல் விடுப்புகள் பற்றி அறிந்து கொள்வோம்.
                                                                  1)தற்செயல் விடுப்பானது 16.06.1985 முதல் நாள் காட்டி ஆண்டிற்கு 12 நாட்கள் வீதம் அனுமதிக்கப்படுகிறது .அதிக பட்சமாக தொடர்ந்து பத்து நாட்கள் வரை (விடுமுறை நாட்கள் உள்பட ) அனுபவிக்கலாம் .(563 பநீசீ. 30.05.85)
                                                           2)இருப்பினும் 11-வது மற்றும் 12-வது நாட்கள் எதிர்பாராதவிதமாக அரசு விடுமுறையாக அறிவிக்கும் நிலையில் பத்து நாட்களுக்கு அதிகமாகவும் தற்செயல் விடுப்பினை அனுபவிக்கலாம் .(309 பநீசீ 16.08.93)     


கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை(RESTRICTED HOLIDAY) எல்லா விடுப்புகளோடும் இணைத்து அனுபவிக்கலாமா?


அரசு கடித எண்.24686 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.4.4.1989ன்படி கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை (RESTRICTED HOLIDAY) தற்செயல் விடுப்பு,

ஈடுசெய் விடுப்பு ஆகிய விடுப்புகளோடு மட்டுமே இணைத்து அனுபவிக்கலாம். பிற விடுப்புகளோடு இணைத்து அனுபவிக்க இயலாது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.