Skip to main content

ஒப்பந்ததாரர்களே சத்துணவு மையத்துக்கு நேரடியாக முட்டை வினியோகிக்கும் திட்டம்


தமிழகம் முழுவதும், சத்துணவு மையங்களுக்கு, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களே நேரடியாக முட்டை வினியோகம் செய்யும் திட்டம், இந்த வாரம் முதல் அமலுக்கு வருகிறது. எடை குறைவாக இருந்தாலோ, புல்லட் முட்டையாக இருந்தாலோ, அவற்றை திருப்பி கொடுத்து விட வேண்டும். அவ்வாறான முட்டைகள், பள்ளியில் வழங்கப்பட்டால் அமைப்பாள
ர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில், 41 ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன. 1.27 லட்சம் பணியாளர் இருக்க வேண்டிய நிலையில், 30 ஆயிரம் காலிப்பணியிடம் போக, 97 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த, 55 லட்சம் மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர். தற்போது கலவை சாதத்துடன் தினசரி முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

முட்டை கொள்முதலை பொறுத்தமட்டில், சென்னையில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் மாநில அளவிலான டெண்டர் விடப்படுகிறது. இதில், பல்வேறு மாவட்ட கோழிப் பண்ணையாளர்களும் பங்கேற்பர். மாவட்ட வாரியாக டெண்டர் எடுத்தோர், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், அந்தந்த ஒன்றிய அலுவலகத்துக்கு முட்டையை அனுப்பி விட வேண்டும். அமைப்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒன்றிய அலுவலகம் சென்று, முட்டையை வாங்கிக்கொண்டு மையத்துக்கு செல்ல வேண்டும். சத்துணவு முட்டையானது, தலா, 46 முதல், 52 கிராம் வரை இருக்க வேண்டும். 12 முட்டைகளை ஒரே சமயத்தில் எடை போட்டால், 552 கிராம் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்நிலையில், சத்துணவு முட்டையில் பல்வேறு ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அரசு மீது எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனால், முட்டை வினியோகத்தை நேரடியாக பண்ணையாளர்களே செய்வதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இந்த வாரம் முதல் இம்முறை அமலுக்கு வருகிறது.

முட்டை வாங்கும்போது, அதன் எடை சரியாக உள்ளதா, சிறிய அளவிலான முட்டை உள்ளதா? என்பதை கவனித்து வாங்கினால் போதும். முட்டையில் குறைபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட பி.டி.ஓ.,விடம் தெரிவிக்கலாம். இதுகுறித்து, சத்துணவு பிரிவு அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘’பள்ளிகளுக்கு நேரடியாக முட்டை சப்ளை செய்யும் திட்டம் இந்த வாரம் அமல்படுத்தப்படுகிறது. ஒரு முட்டைக்கு, 15 காசு வீதம் போக்குவரத்து கட்டணத்தை அரசு வழங்குகிறது. அமைப்பாளர்களுக்கு இது பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும். சிவில் சப்ளைஸ் எவ்வாறு பொருள் வழங்குகின்றனரோ அதுபோல், முட்டை இனி சத்துணவு மையத்துக்கு வந்து சேரும். அவை சரியான எடையில் உள்ளதா, சிறிய முட்டையாக உள்ளதா? என்பதை பார்த்து வாங்க வேண்டும். தவறுதலாக வரும் பட்சத்தில் பி.டி.ஓ.,விடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்கு முன், பி.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து வாங்கி வரும்போது, முட்டை சேதமாகும் நிலை ஏற்பட்டது. இதனால் அமைப்பாளர்கள் அவித்த முட்டைக்கு பதிலாக ஆம்லெட் போடவேண்டிய நிலை இருந்தது. இனி, அந்த நிலை இருக்காது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1523 மையங்களுக்கும் இவ்வாறு நேரடியாக முட்டை சப்ளை செய்யப்படும்’’ என்றார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.