தமிழகத்தில் இம்மாத இறுதிக்குள் அரசு மருத்துவமனைகளில் 7,300 செவிலியர்கள் நியமனம்: சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் இம்மாத இறுதிக்குள் அரசு மருத்துவமனைகளில் 7,300 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.திருச்சி
அரசு மருத்துவ மனையில் நேற்று ‘குழந்தை களுக்கான நோய்கள் மற்றும்பிற குறைபாடுகளைக் கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிக்கும் மையத்தை’ திறந்துவைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மற்றும் அரசு பொது மருத்துவமனை என தமிழ்நாட்டில் மொத்தம் 31 மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப் பட்டு வருகின்றன.
செவிலியர் பணிக்கு விண்ணப் பித்த 40 ஆயிரம் பேரில் 38 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 7,300 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இம்மாத இறுதிக்குள் அரசு மருத்துவமனைகளில் அவர்கள் பணி நியமனம் செய்யப்படுவர்.தமிழகத்தில் சாதாரண வைரஸ் காய்ச்சல் பாதிப்புதான் உள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பெரிதும் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. டெங்கு காய்ச்சல் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளை ஒருங்கி ணைத்து ஒட்டுமொத்த தூய்மைப் பணியும் மேற்கொள்ளப்படுகிறது என்றார். தொடர்ந்து, தாய்ப்பால் வங்கியின் செயல்பாடுகள், தீவிர சிகிச்சை பிரிவு, காசநோய் பிரிவு, உயர்தர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் அளிக்கப்படும் சிகிச்சைகளை அமைச்சர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.