Skip to main content

பெண் குழந்தை 'ஸ்காலர்ஷிப்' செப்., 30க்குள் விண்ணப்பம்

'மத்திய இடைநிலை கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ.,யின், ஒரு பெண் குழந்தைக்கான கல்வி உதவித் தொகை பெற, செப்., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளியில், 10ம் வகுப்பு முடித்த மாணவியருக்கு, மத்திய அரசின் கல்வி உதவி
த்தொகை வழங்கப்படுகிறது. இதில், குடும்பத்தில், ஒரே ஒரு பெண் குழந்தையாக இருக்கும் மாணவி யருக்கு, பிளஸ் 2 வரை, மாதம், 500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை பெற, மாணவியர், 10ம் வகுப்புத் தேர்வில், 60 சதவீதம் அல்லது, 6.2 என்ற தரவரிசை பெற்றிருக்க வேண்டும். இந்த தகுதி உள்ளவர்கள், http://cbse.nic.in/ இணைய தளம் மூலம், 'ஆன் - லைனில்' செப்., 30க்குள் விண்ணப்பிக்கலாம். 'ஆன் - லைன்' பதிவுக்கு பின், ஆவணங்களை, அக்., 15க்குள், டில்லியிலுள்ள சி.பி.எஸ்.இ., அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.இத்தகவலை சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2