Skip to main content

தட்டெழுத்துத் தேர்வுகள் ஆக.,29-ம் தேதி தொடக்கம்

தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில் நடைபெறும் தட்டெழுத்து தேர்வுகள் இம் மாதம் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெறுகிறது.இது குறித்து தமிழ்நாடு தட்டெழுத்து-கணினி பள்ளிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சோம சங்கர் புதன்கிழமை வெ
ளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


ஆண்டு தோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் தட்டெழுத்துத் தேர்வினை நடத்துகிறது. 29-ம் தேதி (சனிக்கிழமை) தட்டெழுத்து இளநிலைத் தேர்வு நான்கு அணிகளும், 30-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு ஐந்தாவது அணிக்கும் தேர்வு நடைபெறுகிறது. 30-ம் தேதி காலை 10.20 மணிக்கு தட்டெழுத்து முதுநிலைத் தேர்வுகள் தொடங்கி மூன்று அணிகளாக நடைபெறுகிறது.29-ம் தேதி தட்டெழுத்து ஆங்கிலம் உயர்வேகத் தேர்வு 10.20 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரையிலும், தட்டெழுத்து தமிழ் உயர்வேகத் தேர்வு நண்பகல் 12.10 மணிக்குத் தொடங்கி 12.20 வரையிலும் நடைபெறுகிறது.

மேலும் 30-ம் தேதி மாலை 3.50 முதல் 4 மணி வரையிலும், 4.30 மணி முதல் 4.40 வரையிலும் புதுமுக தட்டெழுத்துத் தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழ் இரு அணிகளாக நடைபெறுகிறது.தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் இந்தத் தேர்வுகள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் 98 மையங்களில் நடைபெறுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்